யுத்தத்தின் போது வீரமரணமடைந்த வரலாற்று நாயகர்களுக்கு பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீரவணக்க நிகழ்வு
வீரவணக்க நிகழ்வு..!
2009 காலப் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக போராடி வீரமரணமடைந்த வரலாற்று நாயகர்களில் மாவீரராக அடையாளப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் வீரவணக்க நிகழ்வு. எதிர்வரும் 22.10.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணிக்கு சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஏற்பாட்டின் அடிப்படையில் பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
மாவீரர்களின் திருவுருடப் படம் தாங்கிய இந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு, தாயக விடுதலையை உயரிய இலட்சியமாகக் கொண்டு இறுதிவரை களமாடி தங்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம்.
முகவரி:
மாவீரர் மண்டபம்,
உலகத் தமிழர் வரலாற்று மையம்,
ஓக்ஸ்போட்
OX17 3QP
நாள்:
22.10.2023
ஞாயிற்றுக்கிழமை
நேரம்:
மாலை 2.00 மணி
தொடர்புக்கு:
07983337797
07414466757
நன்றி.
தமிழீழ மாவீரர் பணிமனை
பிரித்தானியா.
