தேசிய நீர்வழங்கல் சபையில் திறமையற்ற ஊழியர்கள் உள்ளனர் - ஜீவன் தொண்டமான்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#JeevanThondaman
Thamilini
2 years ago
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (03.10) வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,பல துறைகளில் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், சில துறைகளில் பணியாளர்கள் உபரியாக இருப்பதாகவும் கூறிய அவர், சுமார் 70 சதவீதமானோர், திறமையற்ற பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையின் அடிப்படையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.