தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம்!

#SriLanka #Parliament #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம்!

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அடுத்த மாதம் 6ஆம் திகதி விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையின் பிரகாரம், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!