இந்த வருடத்தில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவு
#SriLanka
#Earthquake
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
இந்த வருடத்தில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 06 புத்தள மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளது.
மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும் இந்த நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நில அதிர்வினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.