தெருநாய்களால் ஏற்படும் தொல்லைக்கு யார் பொறுப்பு?
இலங்கையில் வருடாந்தம் ஏறக்குறைய மூன்று இலட்சம் நாய்கள் மற்றும் ஏனைய விலங்குகள் கடிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டாலும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எந்த அமைச்சகமும் இல்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாய்களினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாத்திரமே சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
மேலும், நாய்களுக்காக விலங்குகள் வதை அமைப்புகள் நிற்கும் போதும், அந்த விலங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லை மற்றும் ஆபத்தை கட்டுப்படுத்த அந்த அமைப்புகளின் தலையீடு இல்லை என்றும் அவர் கூறினார்.
எந்த தரப்பினரின் தலையீடும் இல்லாததால் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகளும் பாரிய பிரச்சினையாக உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.