சிங்கள மக்கள் என்னை நேசித்தார்கள்: 800 திரைப்படம் தொடர்பில் முரளிதரன் வெளியிட்டுள்ள தகவல்!

உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட “800” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில் அது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (21) கொழும்பில் நடைபெற்றது. முத்தையா முரளிதரன் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முத்தையா முரளிதரன், “முதலில் என் சகோதரர் அர்ஜுனனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அந்த காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் கவனித்துக்கொண்டார்.
அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன்.
ஒரு கேப்டன் கூட அவ்வாறு செயற்படவில்லை. அதை செய்யவும் முடியாது. இந்தப் படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
"இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள். அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும்." என்றார்.