கவனயீனமாக செயற்பட்ட அதிகாரிகள் - காலியில் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
#SriLanka
#weather
#Flood
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கனமழை காரணமாக காலி நகரின் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
காலி பிரதான வீதி, காலி-மாத்தறை பிரதான சாலை, காலி-வக்வெல்ல சாலை, காலி-பத்தேகம பிரதான சாலை, சரெந்துகடே சந்தி, தலபிட்டிய, தனிபொல்கஹா, தங்கெதர, பெலிகஹா மற்றும் காலி கோட்டை சுற்றுலாப் பகுதியில் உள்ள பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்யத் தவறியதாலும், அவற்றின் மீது கட்டப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
