இலங்கையின் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
8 months ago
இலங்கையின் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது!


இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக உள்ளது. ஜூலை மாத பணவீக்கம் 4.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆகக் காணப்படுகிறது. ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை -2.5% ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 53.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.