தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டுபாயிலிருந்து SL-226 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அவரது பயணப்பையில் இந்த தங்க பிஸ்கட்டுகளை கண்டுபிடித்து அவரைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.