இலங்கையரின் கடவுச்சீட்டில் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை!

#SriLanka #Passport #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
இலங்கையரின் கடவுச்சீட்டில் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை!

இலங்கையர்போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கத்தாரின் தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம்  வருகை தந்த அவர், நேற்று (20.09) மாலை  நாட்டிற்குள் நுழைய முற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அவர் தனது இலங்கை கடவுச்சீட்டை உள்ளூர் குடிவரவு கவுன்டர்களிடம் ஒப்படைத்துள்ளார், இதன்போது கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்திற்கும், இவருக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சந்தேக நபரின் உடமைகளில் இருந்து உண்மையான மலேசிய தேசிய அடையாள அட்டையையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

IA இன் குடிவரவு தரவு அமைப்பின் படி, இலங்கை கடவுச்சீட்டின் உண்மையான உரிமையாளர் செப்டம்பர் 10 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

ஆகவே இலங்கை பிரஜையுடன், இவர் தனது கடவுச்சீட்டை மாற்றிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் தொடர் விசாரணையைத் தொடர்ந்து, மலேசிய பிரஜை தோஹாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு