பத்திரிகையாளர் மீது எச்சில் துப்பிய நவாஸ் ஷெரீப்பின் ஓட்டுநர் (காணொளி)

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஓட்டுநர் லண்டன் ஹைட் பூங்காவில் பெண் ஒருவரின் முகத்தில் எச்சில் துப்புவது போன்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்த 73 வயது அரசியல்வாதியின் வாகனத்தை ஒரு பெண் நெருங்கி வருவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது
இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த பெண், நவாஸ் ஷெரீப் ஊழல் செய்தவரா என்று கேட்டுள்ளார். ஓட்டுநர் காரின் ஜன்னலைத் திறந்தபோது, ”நீங்க ரொம்ப ஊழல்வாதி பாக்கிஸ்தானிய அரசியல்வாதி என்று கேள்விப்பட்டேன்.
இந்தக் கருத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த டிரைவர் அவள் முகத்தில் எச்சில் துப்பிவிட்டு, ஜன்னலைச் மூடிவிட்டு காரை ஓட்டிச் சென்றார் என தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் உறுப்பினர் டாக்டர் பாத்திமா கே, X இல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மற்றும் வீடியோவில் உள்ள பெண் ஒரு பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டார்.




Nawaz Sharif's driver spits on the face of a journalist who asked a question!
— Dr Fatima K - PTI (@p4pakipower1) September 16, 2023
None of the liberals, intellectuals or feminists will speak against it.
Sick of this selective morality!!
Disgusting 🤢 pic.twitter.com/fsKdgVu5vm