டிக் டாக் செயலி மீது 345 மில்லியன் யூரோக்கள் அபராதம்

#Bank #Social Media #money #Finance #TikTok
Prasu
1 year ago
டிக் டாக் செயலி மீது 345 மில்லியன் யூரோக்கள் அபராதம்

சீன சமூக ஊடக தளமான TikTok மீது 345 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குழந்தைகளின் தரவு மீறல்கள் தொடர்பில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் இரண்டு வருட விசாரணையின் பின்னர் 369 மில்லியன் டொலர்களுக்கு சமமான இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையம் 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதில் TikTok இன் இணக்கத்தை ஆராயத் தொடங்கியது.

இது 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான TikTok இன் வயது சரிபார்ப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த நிலையில் எந்த விதத்திலும் மீறல்களையும் கண்டறியவில்லை.

TikTok கணக்குகளை பதிவு செய்யும் குழந்தைகளின் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் அல்லது கருத்து தெரிவிக்கலாம் என்று ஆணையம் தெரிவிக்கிறது.

இது ஒரு பெரிய பிரச்சினை என கூறி, அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

 சீன தொழில்நுட்ப நிறுவனமான TikTok இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடக கருவியாகும். இதில் அமெரிக்காவில் 150 மில்லியன் பயனர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 134 மில்லியன் பயனர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!