எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி இளைஞன் மரணம்
#Death
#Anuradapura
#Train
#sri lanka tamil news
Prasu
2 years ago
அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உயிரிழந்தவர் மஹவ மடபொகுன பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.