சர்வதேச நாணய நிதியத்தின் 57 உறுதிமொழிகளில் 38 ஐ மாத்திரமே நிறைவேற்றிய இலங்கை!

#SriLanka #Sri Lanka President #IMF #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின்  57 உறுதிமொழிகளில் 38 ஐ  மாத்திரமே நிறைவேற்றிய இலங்கை!

வெரிட்டே ஆராய்ச்சியின் சமீபத்திய தகவலின் படி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 17வது திட்டத்தின் கீழ் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட 57 கண்காணிக்கப்படக்கூடிய உறுதிமொழிகளில் 38ஐ இலங்கை நிரூபணமாக ‘நிறைவேற்றியுள்ளது’. 

 11 உறுதிமொழிகளின் முன்னேற்றம் இன்னும் "அறியப்படவில்லை" என்றும், அதே நேரத்தில் எட்டு உறுதிமொழிகள் "நிறைவேற்றப்படவில்லை" எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், இரண்டாவது கொடுப்பனவை அங்கீகரிப்பதற்காகவும் IMF இன் குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது.

 எவ்வாறாயினும், அது இப்போது மேலும் ஒக்டோபர் இறுதி வரை தாமதத்தை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் IMF மீளாய்வு, முதலில் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட உறுதிமொழிகளை மையமாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நீடிக்கப்பட்ட காலக்கெடு இருந்தபோதிலும், உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நிதி வெளிப்படைத்தன்மை தளத்தின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன? இத் தளமானது அரையாண்டு அடிப்படையில் மூன்று முக்கிய வகைகளின் கீழ் தகவல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

 (1) முக்கியமான பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும், 

(2) முதலீட்டு சபையின் மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களினதும் பட்டியல், மற்றும் 

(3) சொகுசு வாகன இறக்குமதியில் வரி விலக்கு பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல். 

இவ்வகையான தளம் அரசாங்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன்,அரச வருவாய் செலவில் தனியார் நன்மைகளை வழங்கும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க உதவும்.

 இலங்கையின் பேரண்டப் பொருளாதார மீட்சி மற்றும் உறுதிப்பாட்டுக்கு முக்கியமானதாக ஆட்சி மற்றும் ஊழல் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட, இலங்கைக்கான IMF இன் முதல் வேலைத்திட்டமும் இதுவாகும்.

 அதனால்,மேற்கூறிய நிதி வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை நிறுவுவதற்கான உறுதிமொழியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாகும்.

 குறிப்பாக தோல்விக்கான காரணங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது, IMF பெரும்பாலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய நாடுகளிடம் மென்மையாக நடந்து கொண்ட வரலாறு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!