வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டாலும் நேற்று காலை 44 ரயில் பயணங்கள் ரத்து

#SriLanka #strike #Train
Prathees
2 years ago
வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டாலும் நேற்று காலை 44 ரயில் பயணங்கள் ரத்து

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த போதிலும், நேற்று (14ம் திகதி) காலை சுமார் 44 ரயில்கள் ஓடவில்லை. 

 கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் சாரதிகள் சங்கம் ஆரம்பித்திருந்த பணிப்புறக்கணிப்பு பிரதமர் மற்றும் புகையிரத பொது முகாமையாளருடனான கலந்துரையாடலின் பின்னர் நேற்றுமுன்தினம் (13) இரவு 10.00 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

 எனினும், ரயில் சாரதிகள் பணிக்கு திரும்புவதில் தாமதம் மற்றும் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று (14ம் திகதி) காலை வழக்கம்போல் ரயில் இயக்கப்படவில்லை இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

 எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் (14ஆம் திகதி) ரயில் சேவை வழமைக்குத் திரும்பியதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!