ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிழையான தகவல்களே முன்வைக்கப்பட்டுள்ளன : ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதி!

#SriLanka #UN #Easter Sunday Attack #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிழையான தகவல்களே முன்வைக்கப்பட்டுள்ளன : ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் அனுசரணையுடன் இலங்கை முழுமையான விசாரணைகளை நடத்தி சட்ட நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், பிழையான தகவல்கள்முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54 ஆவது அமர்வில் இன்று (13.09) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி  மேற்படி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி  ஹிமாலி அருணாதிலக, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் குறைபாடுள்ள மற்றும் சரிபார்க்கப்படாத, பக்கச்சார்பான ஆதாரங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக  அரசாங்கம் முழுமையான விசாரணைகளை நடத்தி, பாராளுமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்த போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இவ்வாறு குறிப்பிட்டது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்த. 

இந்த சம்பவம் தொடர்பாக 79 பேர் குற்றச்சாட்டப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் தாக்குதலுக்கு காரணமான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவின் முடிவை உச்ச நீதிமன்றம் அறிவித்தது என்றும் அவர் கூறியுள்ளார். 

அத்துடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் வெளியான அறிக்கைகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!