சனல் 4 வழங்கிய நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்
#SriLanka
#R. Sampanthan
#Easter Sunday Attack
#Lanka4
#TNA
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
இலங்கை மீதான ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானிய Channel 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதன்பின், அவர்களிடம் முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். அவ்வாறு கைது செய்து விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நீதி கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை சர்வதேச தலையீட்டின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.