ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க குழு நியமிக்க தீர்மானம்: ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Easter Sunday Attack #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க குழு நியமிக்க தீர்மானம்: ஜனாதிபதி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

 ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணை குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், முன்னாள் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து தொடர்பில், நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றின் ஊடாக ஆராய எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதல்களின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னதாக குறித்த தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4