துரித உணவு காரணமாக நீரிழிவு மற்றும் மாரடைப்பால் 220 பேர் மரணம்
#SriLanka
#Death
#Food
#Lanka4
Prathees
2 years ago
துரித உணவுக்கு பலர் பழகியதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் நீரிழிவு மற்றும் மாரடைப்பு காரணமாக சுமார் 220 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் 45 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில் பல பெண்களும் ஆண்களும் நூடுல்ஸ் மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை உண்பது இந்த மரணங்களில் பலரை பாதித்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த 2 மாதங்களில் 40 சதவீத மக்கள் துரித உணவு முறையால் இறந்துள்ளதாக அவதானிப்பின் படி அவர் கூறினார்.