மாலியில் ராணுவ தளம் படகு மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 64 பேர் பலி
#Death
#world_news
#2023
#Tamilnews
#Breakingnews
#Died
#ImportantNews
Mani
2 years ago

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில சமயங்களில், அப்பாவி பொதுமக்கள் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு, இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில், நாட்டின் வடக்கே அமைந்துள்ள காவ் பாம்பாவில் அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தினர். அதே போல நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகினை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 49 பொதுமக்களும் 15 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.



