கிரீஸ், துருக்கி, பல்கேரியாவில் சீரற்ற காலநிலை : 12 பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#European
Dhushanthini K
2 years ago

கிரீஸ், துருக்கி, பல்கேரியாவை மிரட்டி வரும் புயலால் 12 பேர் பலியாகி விட்டனர். ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
கன மழை மற்றும் வெள்ளத்தால் இந்த 3 நாடுகளிலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஏராளமான மக்கள் காணாமல்போயுள்ளதுடன், பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதகா அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. துருக்கியில் மட்டும் 1750 வீடுகளில் வெள்ளம் சூழந்துள்ளது. குறித்த வீடுகளில் வசித்த 04 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



