நோபல் பரிசளிப்பு விழாவில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் புறக்கணிப்பு!

#world_news #War #Lanka4 #Russia Ukraine
Dhushanthini K
2 years ago
நோபல் பரிசளிப்பு விழாவில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் புறக்கணிப்பு!

இம்முறை நடைபெறவுள்ள நோபல  பரிசளிப்பு விழாவில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்த அறிவிப்புகளை நோபல் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த வருடத்தில், நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் காரணமாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ந் திகதி நோபல் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்புக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம் ஸ்டாக்ஹோமில் நடைபெறவுள்ள நோபல் பரிசளிப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன. 

இதனையடுத்து இம்முறையும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!