யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் இடையே புதிய இரயில் சேவை
#SriLanka
#Jaffna
#Batticaloa
#Lanka4
#Train
#இலங்கை
#லங்கா4
#யாழ்ப்பாணம்
Mugunthan Mugunthan
2 years ago
இந்தியாவிலிருந்து ரயில்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், அது வெற்றிகரமாக முடிவுற்றால் அடுத்த வருடத்தில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிய ரயில் சேவையை நடத்த முடியுமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாட்டு கடன்களை செலுத்தும் நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதும், தெற்கை போன்றே வடக்கு, கிழக்குக்கும் அபிவிருத்தியில் முன்னுரிமை வழங்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு நேற்று விஜயம் செய்த போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.