சவுதி அரேபியாவில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டவருக்கு தூக்கு தண்டனை!

சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து வெளியிட்ட நபர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
முஹம்மது பின் நாசர் அல்-காம்டிக்கு என்ற நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் இந்த தண்டனை வழங்கப்பட்டது, இவ்வாறான தண்டனைகள் பயங்கரவாத வழக்குகளுக்குப் எதிராக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சமூக ஆர்வலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லண்டனை தளமாகக் கொண்ட ALQSTஇன் வழக்கறிஞர் தலைவரான லினா அல்ஹத்லூல், இந்த சம்பவமானது அதிகாரிகள் அடக்குமுறைகளை இரட்டிப்பாக பச்சை விளக்கு காட்டுவதுபோல் அமைந்துள்ளது என விமர்சித்துள்ளார்.
அவர்கள் தெளிவான மோசமான செய்தியை அனுப்புவதாகவும், அங்கு யாரும் பாதுகாப்பாக இல்லை. ஒரு டுவீட் கூட உங்களை கொல்லலாம் எனவும்தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2022ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா உலகின் தலைசிறந்த மரணதண்டனை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
Thankyou : hindustantimes



