மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

#NorthKorea #Missile #Test
Prasu
2 years ago
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா - அமெரிக்கா இணைந்து இன்று கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1-பி விமானமும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

 வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!