‘அஸ்வெசும’ குறித்த விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

#SriLanka #Lanka4 #money #Shehan Semasinghe
Kanimoli
2 years ago
‘அஸ்வெசும’ குறித்த விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

 அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார். ‘அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

 ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!