மாத்தறை பகுதியில் கொலை சம்பவம் ஒன்று பதிவு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மாத்தறை பகுதியில் கொலை சம்பவம் ஒன்று பதிவு!

மாத்தறை பங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று (30.08) கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயதுடைய நபரொருவர் தனது தாயை தெப்பத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சந்தேக நபர் சில காலமாக மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த இவர், இரவில்  தனது சகோதரரின் வீட்டில் குழப்பம் விளைவித்துள்ளார். 

பின்னர், இன்று அதிகாலையில் இருந்து உறவினர்களோடு சண்டையிட்டு வந்த அவர், அயலவர் ஒருவரின் கையை உடைத்ததுடன், தனது தாயையும் தெப்பத்தால் தாக்கியுள்ளார்.  இதில் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் உள்ள வெறிச்சோடிய மலசலகூடத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!