ரஷ்யாவின் முக்கிய விமான நிலையத்தை குறிவைத்த உக்ரைன்!

#Airport #Russia #Ukraine #War #Lanka4
Dhushanthini K
2 years ago
ரஷ்யாவின் முக்கிய விமான நிலையத்தை குறிவைத்த உக்ரைன்!

ரஷ்யாவின் முக்கிய விமான நிலையத்தை குறிவைத்து, உக்ரைன் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ரஷ்யாவின் 06 பிராந்தியங்களை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தாக்குதலில்  மேற்கு ரஷ்யாவில் உள்ள Pskov விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட இராணுவ போக்குவரத்து விமானங்கள்  சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்ய விமானப்படையின் விமானப் போக்குவரத்துப் பிரிவு லாட்வியா மற்றும் எஸ்டோனியாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள ஸ்கோஃப் என்ற இடத்தில் தனது தலைமையகத்தை அமைத்துள்ளது. அங்கிருந்து IL-76 என்ற போக்குவரத்து விமானங்களை இயக்குகிறது. 

இந்நிலையில்   உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் 4 பெரிய IL-76 என்ற போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஓடுபாதை சேதமடைந்ததால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உக்ரைன் எல்லையில் இருந்து 660 கிமீ தொலைவில் உள்ள ஸ்கோஃப் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தை தாக்க 10 முதல் 20  ஆளில்லா விமானங்களை  உக்ரைன் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!