மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு
#India
#Student
#people
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து வீட்டு சிலிண்டர்களின் விலையும் 200 குறைக்கப்பட்டுள்ளது, அதே போல் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.400 குறைக்கப்பட்டுள்ளது.