யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

#SriLanka #Jaffna #Attack #Home #Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று இன்றிரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.

 முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

 வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

images/content-image/1689734535.jpg images/content-image/1689734545.jpg images/content-image/1689734574.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!