தந்தை செய்தது எல்லாம் சரியல்ல - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

#SriLanka #Parliament #Sajith Premadasa #Lanka4
Kanimoli
2 years ago
தந்தை செய்தது எல்லாம் சரியல்ல - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ரணசிங்க பிரேமதாச தனது தந்தை செய்தது எல்லாம் சரியல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தந்தை செய்த அனைத்தையும் பின்பற்றும் மகன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தனது தந்தை ரணசிங்க பிரேமதாச செய்த நல்ல விடயங்கள் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறைபாடுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

 சஜித் பிரேமதாச தொடர்ந்தும் இது குறித்து உரையாற்றுகையில்; “.. நீங்கள் செய்வதை எல்லாம் உங்கள் மகன் செய்கிறானா என்பது எனக்குத் தெரியாது. நான் அதைச் செய்வதில்லை. நான் ஒரு சுதந்திரமான நபர். எனக்கு சுயாதீன மனமும் சுயாதீன எண்ணமும் உள்ளது. எனக்கென்று ஒரு இதயமும் மனசாட்சியும் இருக்கிறது.

 பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது எனது மறைந்த தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் செய்த நல்லதொரு செயலாகும். தொழிற்சங்கத் தலைவர்களிடம் என் தந்தை செய்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் அவ்வழியே செல்ல வேண்டும் என்கிறீர்கள். அதுதான் அர்த்தம்…”என தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!