கொழும்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில்! வெளியான அதிர்ச்சி தகவல்

#Sri Lanka #Sri Lanka President #Colombo
Mayoorikka
3 months ago
கொழும்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில்!  வெளியான அதிர்ச்சி தகவல்

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் 908 வீடுகள் உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. 

 இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழிலாளர் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் தன்னாட்சி முகாமைத்துவ அதிகார சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

 கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரகாரம் கொழும்பு பிரதேச செயலகத்தில் 420 வீடுகளும், திம்பிரிகஸ்யாவில் 120 வீடுகளும், கொலன்னாவில் 60 வீடுகளும், இரத்மலானையில் 01 வீடும், மொரட்டுவையில் 307 வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் அமைந்துள்ளன. .

 கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இக்கட்டடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்தார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு