தொடருந்து ஆசன ஒதுக்கீட்டினை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை விரைவில்
#SriLanka
#Lanka4
Prabha Praneetha
2 years ago
தொடருந்து ஆசன ஒதுக்கீட்டினை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து மோசடிகளையும், ஊழலையும் இவ் முறை மூலம் தடுத்து நிறுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.
வாய்மொழிப் பதில்களை எதிர்பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.