திருமணத்திற்கு சென்ற 15 வயதான மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்

#Death #Accident #wedding #Bike
Prasu
2 years ago
திருமணத்திற்கு சென்ற 15 வயதான மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்

தனது சகோதரியின் திருமண வைபவத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 15 வயது மாணவன் ஒருவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹந்தபாங்கொட கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்விகற்கும் மாணவ தலைவராகவிருந்த பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பலா மரத்தில் மோதி நின்றதாக இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

 விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!