மக்களின் ஆதரவைப் பெறுவது உறுதி: அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! ஜனக்க
#SriLanka
#Sri Lanka President
#Election
Mayoorikka
2 years ago
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில் விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவது உறுதி என ஜனக்க ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அவரின் பதவி நீக்கம் குறித்து வினவிய போது, இதன் விளைவு பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்.
அதற்கு முகங்கொடுக்கவும் தயாராக இருந்தேன் எனவும் என்னை நீக்கி விட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருக்கும் மற்றும் பதவிக்கு பொருத்தமற்ற ஒருவரை நியமிப்பது அவர்களுக்கு மிகவும் இலகுவானது என அவர் தெரிவித்தார்.