முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
#Egg
#Lanka4
Prabha Praneetha
2 years ago
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது .
சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார் .
அந்த வகையில், இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிக்கு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்