அம்பனில் விபத்து, ஒருவர் படுகாயம், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவுக்கு மாற்றம்

#SriLanka #Jaffna #Police #Accident #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
அம்பனில் விபத்து,  ஒருவர் படுகாயம், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவுக்கு மாற்றம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று இரவு 10:00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது படுகாயமடைந்து யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் இரவு 10:30 மணியளவில் தனது தோட்டத்தில் காவலுக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறிய நிலையில் அம்பன் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக மதகுடன் மோதி படுகாயமடைந்து பாலம் ஒன்றினுள் வீசப்பட்டுள்ளார்.

 இரவு வேளை என்பதால் யாரும் கண்டுகொள்ளமல் அதிக நேரம் விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்டுள்ளார். அவ்வேளை தற் செயலாக வருகைதந்த இளைஞர் ஒருவர் 1990 நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!