ஸ்ரீ மஹா போதிக்கு 5ஜி அலைக்கற்றையால் எந்த பிரச்சனையும் இல்லை: குழு அறிக்கை
#SriLanka
#Anuradapura
#Lanka4
#technology
#report
#sri lanka tamil news
Prathees
2 years ago
5ஜி தொழிநுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் அலைகளினால் அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இடைக்கால அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.
5ஜி தொழில்நுட்பத்திற்காக வெளியாகும் அலைகள் ஸ்ரீ மஹா போதிக்கு சேதம் விளைவிப்பதாகவும், அதன் இலைகள் உதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து பல்லேகம ஹேமரத்தன தேரர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார்.
இந்த தொலைபேசி சமிக்ஞைகளால் ஸ்ரீ மஹா போதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சம்பந்தப்பட்ட குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.