ஆரபி படைப்பகம்' அன்னையர் தினத்தன்று ஆர்ப்பரிக்கும் வகையில் நடத்திய'கருவறைக் கோவில் - கருணையும் இசையும் கலந்த பலசுவை விழா

#SriLanka
Prabha Praneetha
2 years ago
ஆரபி படைப்பகம்' அன்னையர் தினத்தன்று ஆர்ப்பரிக்கும் வகையில் நடத்திய'கருவறைக் கோவில் - கருணையும் இசையும் கலந்த பலசுவை விழா

கனடாவின் , தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களைத் தலைவராகக் கொண்ட கனடாவின் 'ஆரபி படைப்பகம்' கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சமூக நிகழ்வுகளில் தனது நிகழ்வுகள் வெற்றிபெற தனது ஆதரவையும் வழங்கி நிற்கின்றது.

 அந்த வகையில் , தற்போது சென்னையில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வினோத் ராஜேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 'தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து வருகின்றார் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம்.

 கடந்த அன்னையர் தினத்தன்று ஆர்ப்பரிக்கும் வகையில் நடத்திய' ஆரபி படைப்பகம் நடத்திய கருவறைக் கோவில் என்னும் கருணையும் இசையும் கலந்த பலசுவை விழா வெற்றிகரமாக இடம்பெற்றது .

 தமிழ்வண் தொலைக்காட்சி பிரசாந்த் மற்றும் பைரவி குழுமத்தைச் சேர்ந்த சாந்தி ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள்.

 அன்றைய தினம் அங்கு கலந்து கொண்ட அன்னையர்கள் அனைவரையும் மலர்க் கொத்து வழங்கி வரவேற்றதோடு அவர்கள் அனைவருக்கும் புதிய சேலைகள் வழங்கியும் கௌரவித்தனர் .

 இந்த நிலையில் , பல்வேறுபட்ட கௌரவிப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து 'ஆரோசை' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. இசையமைப்பாளர் சுதர்சன் தலைமையில் இசைக்குழுவினர் தங்கள் அட்டகாசமான இசை நிகழ்ச்சியை நடத்தி சென்றனர்.

 தொடர்ந்து நிகழ்ச்சியை வெற்றிகரமான நடத்த ஆதரவு வழங்கிய அனைத்து வர்த்தகப் பிரமுகர்களும் கௌரவிக்கப்பெற்றனர். 

ஊடக நண்பர்கள் பலரும் மேடைக்கு அழைக்கப்பெற்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று இராப்போசன விருந்தோடு விழா இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!