உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும்
#SriLanka
#exam
#Susil Premajayantha
#Lanka4
#Examination
Kanimoli
2 years ago
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள்களை பரீட்சை திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொது ஆங்கில பாடம் தொடர்பான விடைத்தாள்களை மதிப்பிடும் பணி வரும் 26ம் திகதி முதல் 100 மையங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.