குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் 9 தரகர்கள் உட்பட போதைப்பொருள் வைத்திருந்த 15 பேர் கைது
பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கச் சென்ற 09 தரகர்கள் உட்பட போதைப்பொருள் வைத்திருந்த 15 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் இந்த கடவுச்சீட்டுகளை வரிசையில் நிற்காமல் முறையான நடைமுறைகளுக்கு புறம்பாக தயாரித்து கடவுச்சீட்டுகளை பரிசீலிக்க ரூ.25,000 கட்டணம் வசூலித்தனர்.
குடிவரவு திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றும் இந்த பாரியளவிலான ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குடிவரவுத் திணைக்களத்திற்கு தினந்தோறும் பெருமளவிலான மக்கள் தமது கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கே கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
இதன்காரணமாக குறித்த திணைக்கள வளாகத்தில் தங்கியிருக்கும் தரகர்கள் தலா 25,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கடவுச்சீட்டுகளை வழங்குவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த திட்டமிட்ட கடத்தலில் ஈடுபட்ட 09 தரகர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.