சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சமூக புலனாய்வு பிரிவை அமைக்கத் திட்டம்
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எமது எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பாடசாலைகளின் ஒத்துழைப்புடன் சமூக நுண்ணறிவுப் பிரிவொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது ஆரம்ப நிலை கலந்துரையாடலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் கெடட் பிரிவின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் கெடட் பிரிவின் பாடசாலை கெடட் பயிற்றுவிப்பாளர்களிடம் உரையாற்றிய அவர், தேசிய கெடட் படையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதுடன், தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்நிகழ்வில், பிரிகேடியர் ஜி, எஸ். பொன்சேகா, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்,ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.