இலங்கையில் சிலமணி நேரம் முடக்க நிலைக்குச் சென்ற சமூகவலைத்தளம்!
#SriLanka
#Social Media
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இலங்கையில் இன்றைய தினம் சமூக வலைத்தளமான யூடியூப் வலையமைப்பின் பதிவிடல் செயற்பாடுகள் சில மணிநேரம் முடக்க நிலைக்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.
பதிவிடல் செயற்பாடு முடக்க நிலையில் இருந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது. இருப்பினும் நேரலையில் காணொளிகளை வெளியிட முடிந்ததாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், இது குறித்த காணொளிகளை பதிவிடுவதில் பெரும் சிக்கல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இது குறித்து யூடியூப் நிறுவனத்திடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தொிவிக்கின்றன