வீடுகளில் சுடர் ஏற்றி ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாற வேண்டுகோள்!

#SriLanka #Tamil People #Mullaitivu #Tamilnews #Tamil Food #Mullivaikkal
Mayoorikka
2 years ago
வீடுகளில் சுடர் ஏற்றி ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாற வேண்டுகோள்!

14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

 அத்துடன் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 அத்தோடு இனப்படுகொலைக்கு நீதிகோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள ஊர்தி பவனியும் நேற்றையதினம் (17) இறுதிப்போர் இடம்பெற்ற புதுமாத்தளன் ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பயணத்தை தொடர்ந்து இன்றைய தினம் முள்ளிவாய்க்காலை வந்தடையவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!