யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் சரீரப் பிணையில் விடுதலை
#Jaffna
#Arrest
#municipal council
#Member
Prasu
2 years ago
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று முற்பகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இமானுவேல் ஆனோல்ட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.