11000 ஊழியர்களை பணிநீக்க செய்ய வோடபோன் நிறுவனம் நடவடிக்கை
#Employees
#company
#LayOff
Prasu
2 years ago
உலகம் முழுவதும் டெலிகாம் சேவை வழங்கி வரும் நிறுவனங்களில் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட வோடபோன் நிறுவனமும் ஒன்று. இந்தியாவில் முதலில் தனியாக இயங்கி வந்த வோடபோன் நிறுவனம் பின்னர் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் ஐடியாவாக செயல்பட்டு வருகிறது.
சமீப காலமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் பணியாளர்கள் பலரை பணிநீக்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில் வோடபோன் நிறுவனமும் தனது 11 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
கூகிள், அமேசான், ஐபிஎம் உள்ளிட்ட பல பிரபலமான நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை நீக்க உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.