இந்திய உணவு குறித்து டுவிட்டரில் பதிவிட்ட எலன் மஸ்க்

#India #Twitter #ElonMusk #Tamil Food
Prasu
2 years ago
இந்திய உணவு குறித்து டுவிட்டரில் பதிவிட்ட எலன் மஸ்க்

பாரம்பரியமிக்க இந்திய உணவு வகைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் வட இந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒன்றான பட்டர் சிக்கன் நான் அதிகமானோரால் விரும்பப்படுகிறது. இந்நிலையில் பட்டர் சிக்கன் குறித்து எலான் மஸ்க் செய்துள்ள 'டுவிட்' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-ஐ டுவிட்டரில் சுமார் 14 கோடி பேர் பாலோயர்களாக உள்ளனர். ஆனால் எலான் மஸ்க் பாலோ செய்யும் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த டேனியல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மீம்ஸ்களை பகிர்வது, பிரபலங்களை கிண்டல் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்.

இதை அவரது பாலோயர்கள் விரும்பி ரீ-டுவிட் செய்வார்கள். சமீபத்தில் டேனியல், பட்டர் சிக்கன் நான் உணவை சாப்பிட்டுள்ளார். 

அது அவருக்கு மிகவும் பிடித்து போகவே தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டர் சிக்கன் நான் படத்தை பகிர்ந்து, நான் இந்திய உணவை மிகவும் விரும்புகிறேன். அவை உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை எலான் மஸ்க் பார்த்துள்ளார். மேலும் டேனியலின் பதிவு உண்மை என்று பதில் அளித்துள்ளார். 

இதைப் பார்த்த நெட்டிசன்கள் எலான் மஸ்குக்கு பட்டர் சிக்கன் நான் பிடிக்குமா? என்று டுவிட்டரில் விவாதத்தை தொடங்கி விட்டனர். ஒரு சில பயனர்கள் எலான் மஸ்க் பட்டர் சிக்கன் சாப்பிடுவது போன்றும், சமைப்பது போன்று புகைப்படங்களை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!