புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பல ஆபத்தான விடயங்களை உள்ளடக்கியஅனைவரும் எதிர்க்க வேண்டும் - அம்பிகா சற்குணநாதன்

#SriLanka #Court Order #Lanka4 #sri lanka tamil news
Kanimoli
2 years ago
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பல ஆபத்தான விடயங்களை உள்ளடக்கியஅனைவரும் எதிர்க்க வேண்டும் - அம்பிகா சற்குணநாதன்

நீதிமன்றத்தின் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் அபாயகரமான சட்ட மூலம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் - முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறித்து மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு வழங்கும் சட்டமூலமாகக் காணப்படுவதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

 இன்று புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சட்டத்துறை மாணவர்களுக்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆபத்தான ஒரு சட்டமூலம். ஏனெனில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதச் பாதுகாப்பு அமைச்சர் ஒரு நபரை தடுத்து வைக்கும் ஆணையை வழங்க முடியும்.

 ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் தடுத்து வைக்கும் ஆணையை வழங்கும் அதிகாரம் குறித்த சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ளமை ஆபத்தான விடயம். ஒருவரை தடுத்து வைக்கலாமா இல்லையா ஆதாரம் இருக்கா இல்லையா அல்லது ஒருவரை தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டிய தேவை உள்ளதா என்பது தொடர்பில் நீதவானுக்குரிய அதிகாரம் நாட்டிலுள்ள சுமார் 50 மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக வழங்கப்படுகிறது.

 மேலும் நாட்டின் சட்டம் இயற்றுகின்ற பாராளுமன்றத்தை தாண்டி ஜனாதிபதி சட்டம் இயற்றுகின்ற பொறிமுறைமுறையை குறித்த சட்டம் மூலம் வழங்குவதோடு அவரால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தலையீடும் ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு ஜனாதிபதி விரும்பினால் ஒருவரை ஒரு பிரதேசத்துக்குள் கட்டுப்படுத்தவும் நாட்டுக்குள் கட்டுப்படுத்தவும் குறித்த சட்டம் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குவதோடு ஊடக சுதந்திரம் கருத்தை சுதந்திரம் ஆகியவற்றையும் பாதிக்கும் ஏற்படுகள் குறித்த சட்டமூலத்தில் காணப்படுகிறது.

 ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பல ஆபத்தான விடயங்களை உள்ளடக்கிய சட்டமூலமாக காணப்படும் நிலையில் அதனை அனைவரும் எதிர்க்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!