அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! ஐ.நாவின் முன்னாள் அதிகாரி விசேட உரை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஐக்கிய அமெரிக்காவில் 9 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை, மற்றும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலும் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் ((Mr. Gordon Weiss ), முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து விசேட உரை வழங்கவுள்ளார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவர் இறுதிக் கட்ட ஆயுதப் போரின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார்.
கோடன் வெயிஸ் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு தசாப்தங்கள் சேவையாற்றினார்.
இலங்கையில் ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. செய்தித் தொடர்பாளராகவும் இவர் பணியாற்றினார்.
அத்துடன் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ,புனைகதை அல்லாத ,தி கேச் (The Cage) என்ற நூலையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வு நியூயார்க் நகரம், Flushing town hall :-137-35 Northern Blvd., Queens, NY 11354 என்ற இடத்தில் நியூயார்க் நேரம் 7 - 9 pm வரை இடம்பெறவுள்ளது.