எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டம் - கெஹலிய ரம்புக்வெல்ல
#SriLanka
#Keheliya Rambukwella
#Health Department
#tablets
Kanimoli
2 years ago
எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளின் விலையை 10%-15% குறைக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார்.
இதேவேளை, இன்று (17) தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் மருந்து விலைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி குறித்த தரவுகளை ஆராய்ந்து மருந்து விலை திருத்தம் தொடர்பான அறிக்கையை அமைச்சரிடம் விரைவில் வழங்கவுள்ளதாக மருந்து விலை கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.